30 நாள் சாப்பிடுங்க இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!

0
750

30 நாள் சாப்பிடுங்க இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!

இன்றைய காலகட்டத்தில் கணிணி மற்றும் லேப்டாப் மற்றும் செல்போன்களை பார்த்து பார்த்து கண்கள் குறைபாடுகள் அதிகமாக ஏற்படுகின்றன.கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய கண் குறைபாடுகள் சிறு சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன.

இதையெல்லாம் 30 நாட்களில் சரி செய்யக் கூடிய அருமையான இயற்கை முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. கடுக்காய் பொடி

2. நெல்லி முள்ளி பொடி

3. தேன்.

செய்முறை:

1. முதலில் கடுக்காயை எடுத்துக் கொள்ளவும்.கடுக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது கடுக்காயை வாங்கி தோல்களை எடுத்துக்கொண்டு உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு மேற்புறம் இருக்கும் தோலை மட்டும் இடித்து பொடியாக்கி கொள்ளலாம்.

சிறிய கடுக்காய் பெரிய கடுக்காய் என இரண்டு  இருக்கும். இரண்டும் சம அளவில் எடுத்து கொள்ளலாம் மிகவும் நல்லது.

2. நெல்லி முள்ளி பொடி. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லி முள்ளி பொடி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

3. இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இது எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

1. காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பொடியில் 2 கிராம் அளவிற்கு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து குழைத்து அப்படியே சாப்பிட வேண்டும். சாப்பிட்டபின் சுடுநீர் அல்லது சாதாரணமான தண்ணீர் அருந்தலாம். அரை ஸ்பூன் அளவு சுடு தண்ணீரில் குழைத்தும் சாப்பிடலாம்.

2. மாலையில் இரவு படுக்கப்போகும் முன் இதே மாதிரி செய்து சாப்பிடலாம்.

3. இந்த பொடியானது துவர்ப்பு மற்றும் புளிப்பு கலந்து இருப்பதனால் தேன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அதில் சுவைகளில் மாற்றம் ஏற்பட்டு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

இதனை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர கண் குறைபாடுகள் நீங்குவதை 15 ஆம் நாட்களிலேயே நீங்கள் காணலாம்.

30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காத அளவிற்கு கண் குறைபாடுகள் நீங்கி விடும்.

அழுத்த பயிற்சி:

1. மேலும் ஒரு சில அழுத்தங்கள் கொடுப்பதனால் கண்களில் குறைபாடுகள் விரைவாக நீங்குவதை காணலாம்.

2. கண்ணின் புருவங்களில் இருந்து அழுத்தம் கொடுத்து பக்கவாட்டில் இருக்கும் பள்ளம் போன்ற ஒரு இடத்தில் பத்து தடவை அழுத்தம் கொடுத்து எடுக்கலாம்.

3. இவ்வாறு ஐந்து தடவை செய்யலாம்.

4. இவ்வாறு செய்வதினால் கண்களில் உள்ள ஈரப்பதம் அதிகரித்து கண்களில் வலி ஆகியவை குறைந்து கண் குறைபாடுகள் நீங்க கண்ணின் செயல்பாடுகள் விரைவாக செயல்படுவதற்கு மாற்று வழியாக அமையும்.

Previous articleசர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இதை சாப்பிட்டால் போதும்!
Next articleபெண்கள் ஏன் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது?