தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்! 

0
414
#image_title

தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்! 

மிகவும் சுலபமாக உடல் வலி கை கால் வலியை போக்கக்கூடிய ட்ரிங் செய்யக்கூடிய முறையை பார்ப்போம்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தோலுடன் கூடிய உடைத்த உளுந்து 2 கப்  அளவு எடுத்துக் கொண்டு அதில் போட்டு 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்கு வறுக்கவும். எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும். மிதமான தீயிலேயே வறுப்பது நல்லது. நன்றாக வாசம் வரும். லேசாக நிறம் மாறி சிவந்து வரும் சமயம் வரை நன்றாக வறுக்கவும்.

* தோல் உளுந்தில் நார்ச்சத்து அதிகம். இதை நாம் தினமுமே எடுத்துக் கொள்வதால் நமது எலும்புகள் நன்கு வலுவாகும். வளர்கின்ற குழந்தைகளுக்கு இதை தினமும் கொடுத்து வந்தால் அவர்களது உடல் நன்கு வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

* உளுந்து நன்கு வறுபட்டதும் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். பின்னர் அதே வாணலியில் அரைக்கப் அளவு பச்சரிசி சேர்த்து வறுக்கவும். பச்சரிசி சேராதவர்கள் மற்றும் அதன் வாசனை பிடிக்காதவர்கள் இதற்கு பதிலாக புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். அரிசி பொரியத் தொடங்கியதும் அதையும் உளுந்துடன் சேர்த்து ஆறவிடவும்.

* ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு சல்லடையில் சலித்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதை இரண்டு மாதங்கள் வரை வெளியிலேயே வைத்து பயன்படுத்தலாம். இது கஞ்சிக்கு மட்டுமல்லாமல் அடை, போண்டா, களி கூட இந்த பவுடரில் செய்யலாம்.

* இந்த பவுடரில் இருந்து 4 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். ஒரு ஆளுக்கு ஒரு ஸ்பூன் அளவு நான்கு பேருக்கு இது சரியாக இருக்கும். இதில் நான்கு கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்னர் கட்டி இல்லாமல் நன்கு கரைத்து அடுப்பில் வைக்கவும்.

* அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்குள் தண்ணீருடன் பவுடர் நன்றாக கலந்து நமக்கு உளுந்தங்கஞ்சி ரெடி ஆகிவிடும்.

* நன்கு கொதிய ஆரம்பித்து கெட்டியாகும் போது கால் ஸ்பூன் சுக்கு பொடி, கால் ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். பின்னர் அரை கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்கவும். பின்னர் 4 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.

* சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிய விட்டு இறக்கி வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் நறுக்கிய பாதாம் ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து செய்து வைத்த கஞ்சியில் சேர்க்கவும். இதனால் சுவை அதிகரிக்கும்.

இப்போது இதனை டம்ளரில் ஊற்றி குடிக்கலாம். பால் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக கஞ்சி செய்ததும் இறக்கி வைத்து அதில் உப்பு,  மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

 

 

 

Previous articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காணும் நாள்!!
Next articleஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!