சர்க்கரை கட்டுக்குள் வர மற்றும் இன்சுலின் சுரக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

Photo of author

By Kowsalya

சர்க்கரை கட்டுக்குள் வர மற்றும் இன்சுலின் சுரக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

இன்றைய 100- ல் 70% மக்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள். அவர்கள் படும் பாட்டை நாம் சொல்லி மாளாது.

கண்முன்னே பிடித்தது இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று உணர்ந்தால் தான் புரியும்.

இந்த முறையை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரந்து உங்கள் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்;

1. சின்ன வெங்காயம்- 3

2. இஞ்சி அரை துண்டு

இந்த இரண்டு பொருள் தான் உங்களின் சர்க்கரை அளவை இரண்டே நாட்களில் குறைத்து காண்பிக்கும்.

1. 3 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

2. 1/2 துண்டு இஞ்சியை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.

இரண்டையும் சிறிய உரலில் வைத்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை வெறும் வயிற்றில் காலையில் 1 டீஸ்பூன் என ஒரு வாரம் எடுத்து வந்து, அடுத்த வாரம் சர்க்கரை அளவை மருத்துவமனையில் பரிசோதித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களது சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கும்.

இதை ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் செய்யலாம்.

அந்த வாரம் முழுக்க ஏழு நாள் எடுத்துக் கொண்டு, அடுத்த வாரம் ஏழு நாள் விட்டுவிட்டு அதற்கு அடுத்த வாரம் தொடரலாம்.

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயை மறந்துவிடுவீர்கள்.