நமது உடலின் அனைத்து பாகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய பனங்கற்கண்டை பத்திதான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பனைமரம் இருக்கும் இடத்தில் தான் நீர்வளம் இருக்கும். பனை மரத்தில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பொருட்கள் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பனைமரங்கள் அழிந்து வருகிறது.
நம் முன்னோர்கள் காலத்தில் பனைவெல்லம், கருப்பட்டி இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். நாம்தான் இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி ஏராளமான நோய்களுக்கு ஆளாகிறோம்.
பனங்கற்கண்டினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
சிலருக்கு பனிக்காலம் தொடங்கும் போது தொண்டை கரகரப்பாக, சளி பிடிப்பது போல் இருக்கும் இதற்கு பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று அதன் உமிழ் நீரை மட்டும் சாப்பிட்டாலே சளி பிடிப்பது தொண்டை கரகரப்பு சரி ஆகிவிடும்.
அதேபோல் பனிக்காலங்களில் சளி பிடிப்பது, இருமல் போன்ற தொந்திரவுகள் இருக்கும். இதற்கு பனங்கற்கண்டு 1ஸ்பூன், மிளகுதூள் 1/4 ஸ்பூன், நல்ல பசு நெய் சிறிதளவு இந்த மூன்றையும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை என 2 நாட்கள் சாப்பிட்டால் சளி, இருமல் தொந்தரவு சரியாகி விடும்.
மாலை நேரங்களில் அவல் (அவல் பொரி) உடன் பனங்கற்கண்டு சேர்த்து சிற்றுண்டி போல் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது சளி, இருமல் தொந்திரவுகள் இல்லாமல், உடல் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்கும்.
இன்றைய சூழலில் மக்கள் துரித உணவுகள், எடுப்பதால் அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு பனங்கற்கண்டு 1 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் இருக்காது.
குழந்தைகளுக்குஏற்படும் மூளை சோர்வு, அதாவது தற்போதுள்ள குழந்தைகள் டிவி, செல்போன் வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கி கிடப்பதால் மூளை சோர்வு, கண் பார்வை குறைபாடு, ஞாபக மறதி அதாவது மூளை சோர்வு உண்டானலே உடல் சோர்வு, ஞாபக மறதி போன்றவை உண்டாகும்.
இது பெரியவர்களுக்கும் பொருந்தும். இதற்கு 50 கிராம் பனங்கற்கண்டு, 50 கிராம் பாதாம் பருப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் அல்லது பெருஞ்சீரகம் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.
இதை காலையில் 1 ஸ்பூன், இரவு தூங்குவதற்கு முன் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மூளை சோர்வு, உடல் சோர்வு, ஞாபக மறதி, பார்வை குறைபாடு நீங்கி உடல் சுறுசுறுப்பாக காணப்படும். இதை பாலில் கலந்தும் குடிக்கலாம். இதை குழந்தைகளுக்கு தேர்வு சமயங்களில் கொடுப்பது மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் பனங்கற்கண்டு 50 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், 2 டீஸ்பூன் மிளகு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடல் சோர்வு, கை, கால் வலி, முழங்கால் வலி எல்லாவற்றையும் சரி செய்யும்.
இது கிட்னியில் உருவாகும் கற்களையும் நீக்குகிறது. சின்ன வெங்காயத்தை உரித்து சாறு எடுத்து 1 ஸ்பூன் பணங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரக கற்களை நீக்குகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், இரத்த அழுத்தம் போன்றவை 1 ஸ்பூன் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் இவை அனைத்தும் சரியாகும்.
1 ஸ்பூன் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், உடல் சூட்டினால் உருவாகும் கட்டிகள் ஆகிவற்றை குறைத்து உடலை குளி்ச்சியாக வைக்கும்.
மேலும் பற்களை வலுவாக்கும், ஈறுகளில் இரத்தகசிவை போக்கும்.
நுரையீரலில் பிரச்சனை உள்ளவர்கள் அதாவது நுரையீரலில் சளி, புகைப்பிடிப்பதால் நுரையீரலில் உண்டாகும் மாசு போன்றவை பனங்கற்கண்டுடன் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள மாசுக்கள் சரியாகி நுரையீரல் நன்றாக இயங்குவதற்கு வழி செய்கிறது.
வெள்ளை சர்க்கரையை தவிர்த்து இது போன்ற பல நன்மைகள் தர கூடிய பனங்கற்கண்டை பயன்படுத்துவோம்.