தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

Photo of author

By Divya

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

பாலைவன பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பேரிச்சம் பழத்தில் அதிகளவு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் பழங்களில் ஒன்றாகும்.

இந்த பேரிச்சையை மற்ற பழங்களை போல் மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உண்ண முடியாது.இவை மரங்களில் இருக்கும் பொழுது உவர்ப்பு தன்மையை கொண்டிருக்கும்.இதனை இனிப்பு சுவைக்கு கொண்டுவர பதப்படுத்தப் படுகிறது.பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது.அதனோடு
தாதுக்கள்,நார்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.
இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் திறன் கொண்டவை.

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள்:-

*மற்ற பழங்களை போல் பேரிச்சையையும் தினமும் 1 சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலில் எலும்புகள் வலுப்பெறும்.காரணம் இதில் அதிகளவு வைட்டமின் டி,பொட்டாசியம்,காப்பர், மெக்னீஷியம்,பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகளவில் நிறைந்துள்ளது.இதனால் மூட்டு வலி,மூட்டு தேய்மானம்,எலும்பு ஜவ்வு பாதிப்பு,எலும்பு தேய்மானம் உள்ளிட்டவை குணமாகும்.

*தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும்.இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தம்மை காத்துக்கொள்ள முடியும்.

*நாள்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சோகை பாதிப்பு சரியாகும்.

*பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் முடி உதிர்தல் பாதிப்பு விரைவில் சரியாகும்.பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்பு சத்து உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

*கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பாலில் ஊற்றவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் கரு ஆரோக்கியமாக வளரும்.அதோடு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பேரீச்சம் பழம் பெரிதும் உதவியாக இருக்கிறது.

*பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் செரிமான பாதிப்பை சரி செய்யும் தன்மை கொண்டது.இதனால் குடல் வீக்கம்,மலசிக்கல்,குடல் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

.*பேரச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் ‘ஏ’ கண்பார்வை குறைபாடு பாதிப்பை குணமாகும் தன்மையை பெற்று இருக்கிறது.அதேபோல் உடலுறவு வைத்து கொள்வதற்கு ஆண்கள் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை உண்பதால் நல்ல பலன் உண்டாகும்.