இரவில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வயிறு உப்பசம் மற்றும் வாயுத் தொல்லை முழுமையாக சரியாகும்!!

Photo of author

By Divya

இரவில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வயிறு உப்பசம் மற்றும் வாயுத் தொல்லை முழுமையாக சரியாகும்!!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.உடலில் வயிறு பகுதியில் கோளாறு ஏற்பட்டால் செரிமான பிரச்சனை,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு எரிச்சல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை மருத்துவம் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை
2)நார்த்தங்காய் இலை
3)மாவிலை
4)மணத்தக்காளி இலை
5)ஓமம்
6)வெந்தயம்
7)சுக்கு

செய்முறை:-

முதலில் ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை,மாவிலை,மணத்தக்காளி இலை மற்றும் நார்த்தங்காய் இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

மொரு மொறு பாதத்தில் இருக்க வேண்டும்.இந்த இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அதே மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி ஓமம்,ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இதை அரைத்த இலை பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை:-

இரவு தூங்கச் செல்வதற்கு முன் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு ஸ்பூன் அளவு அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் செரிமானக் கோளாறு,வாயுத் தொல்லை,குடற்புண் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.