தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Photo of author

By Hasini

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Hasini

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதில் மீண்டும் மழை என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

அதிலும் குறிப்பாக மலை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதும்  மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்பட பல தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தற்போது தென்காசியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையும் அதற்கு ஒரு  காரணமாக உள்ளது. அந்த அருவிகளில் நீர்வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதன் காரணமாக அங்கு உள்ள தடுப்புகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் இது ஒரு வரலாறு காணாத நிகழ்வாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக அருவிகளின் அருகில் செல்லவோ அல்லது சுற்றுலா பயணிகள் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.