மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்!
மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து, பலத்த மழை பெய்த வண்ணமே உள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக நேற்று அதாவது வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களிலும் நில சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்ஸில் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில் கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பலத்த மழையின் காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து மீட்புப் பணிக்காக இரண்டு கடற்படை மீட்புக் குழுக்கள் ராய்கட் மாவட்டத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கும், ஐந்து குழுக்கள் ரத்னகிரி மாவட்டத்திக்கும் சென்றுள்ளன.
(என்.டி.ஆர்.எஃப்) தேசிய பேரிடர் மீட்பு படை மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உதவி வருகிறது. ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவுகளும் நேற்று மாலை மட்டுமே நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 உடல்கள் ஒரு இடத்திலிருந்தும் 4 உடல்கள் மற்ற இடங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
30க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவித்துள்ளது