இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!!
இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு இரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லையை சென்று அடையும் என்றும் இந்த சிறப்பு இரயில் விருதுநகர், மதுரை, திருச்சி, கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக நெல்லை சென்றடையும் என்றும் தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் தேர்தல் விடுமுறையை முன்னிட்டு சொந்தமும் ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பும் விதமாக 9 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது. அதாவது தாம்பரம்-கட்டாங்கொளத்தூர் இடையே இந்த 9 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்-கட்டாங்கொளத்தூர் இடையே 30 நிமிட இடைவெளியில் இந்த 9 சிறப்பு இரயில்களும் இன்று இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து கட்டாங்கொளத்தூருக்கு இன்று(ஏப்ரல்22) காலை 4 மணி முதல் 9.30 மணி வரை சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது. அதே போல கட்டாங்கொளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இடையே காலை 4.40 மணி முதல் 10.05 மணி வரை 9 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.