சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்..!! வெளியான முக்கியமான அறிவிப்பு..!! 

0
106
Chennai University Free Education Program
Chennai University Free Education Program
சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்..!! வெளியான முக்கியமான அறிவிப்பு..!!
ஆண்டுதோறும் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பதிவு செய்து மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு 2024-25 ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் இணைந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதாவது சென்னை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து படித்து பயன் பெறும் வகையில் ‘சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
இந்த திட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டுக்கான இலவச சேர்க்கை குறித்து தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்ந்து இலவசமாக இளங்கலை பட்டம் படிக்க வேண்டும் என்ற ஏழை மாணவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அந்த தேதியில் இருந்து www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தில் குடும்ப வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், திருநங்கைகள், குடும்பத்தில் முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்க வரும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.