அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன?
அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது.
அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். இவரின் நடைப்பயணம் நாளை பிரம்மாண்டமாக துவங்க உள்ளது.
பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருச்செந்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்ல இருக்கிறது.
இவரின் நடைப்பயணம் நாளை துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த நடைப்பயணம் அமையும் என்று பாஜக கட்சி நம்பிக்கையாக இருக்கிறது.
இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். இவரைத்தொடர்ந்து பாஜக கட்சியின் சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அண்ணாமலையின் நடைபயண விழாவிற்கு எடப்பாடி செல்லவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை கொங்கு மண்டலங்கள் வேண்டும் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் பங்கேற்கவில்லையா? என்று அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிமுக வலுபெற்றிருக்கக்கூடிய பகுதிகளே கொங்கு மண்டலம் தான் அதையும் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று கொந்தளித்ததாக கூறப்படுகிறது.
எனவே, அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் இவர் நடைபயண விழாவில் கலந்து கொள்ள வில்லையா? இல்லை வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.