எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுக மிகக்கடுமையாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்தும் அந்த திட்டங்களை செயல்படுத்தியும் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதோடு இளைஞர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கிறது இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் எப்படியாவது இந்த தேர்தலில் திமுகவை என்றும் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்கான பணிகளையும் அவர் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளுங்கட்சி செய்த தவறுகள் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி வருகிறார்.


ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தீவிரமாக சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது அவர் ஒரு விவசாயி முதல்வராக இருப்பதை விரும்பவில்லை. அதன் காரணமாக, தான் எங்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கிறார் என்பது போன்ற கருத்துக்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருகிறார்.

அதோடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலெல்லாம் கவல்த்துறையினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி ஈடுபடுகிறது என்பது போன்ற கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவல் துறையைச் சார்ந்த ஒரு உயர் அதிகாரியை அவருடைய பெயரை தெரிவித்து அடுத்து நாங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம் என்கிற விதத்தில் பேசியிருந்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே காவல்துறையினரை மிரட்டும் திமுகவை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆளும் கட்சியான அதிமுக மட்டுமல்லாமல் தற்போது தமிழக காவல்துறையும் ஒன்றிணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழக காவல்துறையினர் அனைவரும் திமுக மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரியை மிரட்டும் பாணியில் பேசியிருந்தார் அதனை திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்களே கண்டித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் என்ற இடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்திற்கு கூட வரமுடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

எந்த காலத்திலும் திமுக மக்களை மதித்தது கிடையாது. அந்த கட்சிக்கு அந்த கட்சியின் குடும்பம் மட்டுமே முக்கியம் தமிழக மக்கள் எதிர்க்கட்சியாக திமுகவிற்கு முக்கியம் கிடையாது இதுவரையில் தமிழக மக்களை திமுக மதித்தது இல்லை இனிமேல் மதிக்க போவதுமில்லை என்று தெரிவித்திருக்கிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செய்திருக்கவில்லை அதன் காரணமாக தான் அவர்கள் செய்த நல்ல திட்டங்களை பற்றி பேசாமல் எங்கள் மீது குற்றம் சுமத்துவதையே எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அடைந்ததை போல மிக மோசமான ஒரு தோல்வியை அந்த கட்சிக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். அதேபோல தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆளுங்கட்சியான அதிமுகவிற்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனை தன்னுடைய குழு மூலமாக தெரிந்து கொண்ட எதிர்க்கட்சியின் தலைமை எப்படியாவது தமிழகத்தில் அதிமுகவின் பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரையும் கெடுத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.

ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் பாமர மக்கள் திமுக பக்கம் சாய்ந்தாலும் தற்போது இருக்கக்கூடிய தமிழகத்தின் இளைஞர்கள் அனைவரும் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.ஆகவே இளைஞர்களின் வாக்குகளை முழுக்க முழுக்க அதிமுகவிற்கு தான் செல்லும் என்ற ஒரு கருத்து கணிப்பும் இருக்கிறது. இதனால் எதிர்க்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்