மருத்துவர்களின் தொடர் மரணம்! முன்னாள் முதலமைச்சர் போட்ட பரபரப்பு ட்வீட்!

0
73

தமிழகத்தில் நடைபெற்ற பரவல் மிகவும் அதிகமாகிக் கொண்டு வருகிறது இந்த நோய்த்தொற்றின் முதல்அலையை விடவும் இரண்டாவதுஅலை தற்போது மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்து வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலான ஒரு விஷயமாக இருந்து வரும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அதனுடன் எதிர்த்து போராடுவதில் நோயாளிகளுடன் முன்கள பணியாளர்களாக இருந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாபெரும் பங்கு இருக்கிறது.

ஆகவே இதற்கு இடையில் தற்போது மதுரை மாவட்டம் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எட்டு மாத கால கர்ப்பிணியான மருத்துவர் திருமதி சண்முகப்பிரியா நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டு இருக்கின்ற வலைப்பதிவில் மதுரை மாவட்டம் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி எட்டு மாத கால கர்ப்பிணியான மருத்துவர் திருமதி சண்முகப்பிரியா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.முன்கள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மருத்துவர் சண்முகப்பிரியா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு போதுமான இழப்பீடு வழங்கிடவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.


அதேபோல சென்னை வேலூரை சார்ந்த செவிலியர்கள் திருமதி இந்திரா மற்றும் திருமதி பிரேமா உள்ளிட்டோர் இந்த நோய் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கிறார்கள். என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்கள பணியாளர்களின் தொடர் இழப்புகளை தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.