அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

0
131

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கவும் ஆரம்பகட்ட நுழைவு தேர்வான NEET எனப்படும் “தேசிய தகுதி நுழைவுத் தேர்வு” கடந்த 2010 ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனால் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலை உருவானது.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்களை வைத்தே நீட் தேர்வுக்கான சேர்க்கை நடைபெற்று வந்த காரணத்தால் தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளிடையே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தமிழக அரசின் பாடத்திட்டங்களுக்கும் வேறுபாடு இருப்பதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான தேர்ச்சி பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது இந்த குறைபாடுகளை களைத்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறும் வகையிலும் புதிய அறிவிப்பு ஒன்றை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில், தமிழக தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க “சிறப்பு சட்டம்’ கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.







Previous articleகிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!
Next articleகொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!