தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இன்று கடலூர் மாவட்டம், புவனகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நான் ஊர்ந்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்.எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உனக்கு என்ன?” என கேள்வி எழுப்பினார்.