கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

0
131
#image_title

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், தொடர்ந்து விவசாயிகள் பாடுபட்டு சாகுபடி செய்த கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலைமை, பல சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கரும்பு பயிரிட்டு பெரும் நஷ்டத்திற்குள்ளான பல விவசாயிகள், கரும்பு சாகுபடியை மெல்ல மெல்லக் குறைத்து, நெல், மக்காச் சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறியும், தேக்கு மரங்களை வளர்த்தும் வருகின்றனர்.

எனினும், கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்துள்ளதாகவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், பயிரிட்ட கரும்புகளை நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்குத் தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகளை வழங்காமலும், காட்டுப் பன்றிகளிடமிருந்து கரும்புகளை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அறிந்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், விடியா அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, ஆய்வு மேற்கொண்டு கரும்பு பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்குத் தேவையான பூச்சி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் காட்டுப் பன்றி தாக்குதலில் இருந்து பயிரிடப்பட்டுள்ள கரும்புகளைக் காப்பாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அவர்களை எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் நீண்டு காலமாக நிலுவையில் உள்ளதாகவும், வேளாண்மை துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் போதிய அளவில் இல்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!
Next articleகாப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!!