காப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!!

0
41
#image_title

காப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!!

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுபவர் இயக்குநர் அட்லி.இவர் கடந்த 2010 முதல் 2012 ஆண்டு வரை இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குனராக நண்பன்,எந்திரன் படத்தில் பணியாற்றினார்.இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து “முகப்புத்தகம்” என்ற குறும்பட ஒன்றினை இயக்கினார்.இவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளது என்றபோதிலும் வசூல் ரீதியாக இவரின் படங்கள் பல சாதனையை புரிந்துள்ளது என்று சொல்லலாம்.இவர் எடுத்த படங்கள் அனைத்தும் இவரின் சொந்த கதையல்ல.இன்னொரு படத்தின் காப்பி தான் என்று நெகடிவ் விமர்சனங்கள் இவர் மீது எழுந்து வருகிறது.என்னதான் காப்பி அடிச்சாலும் அட்லீ எடுத்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டு வருவது தான் நிதர்சனம்.இவ்வாறு அட்லீ இயக்கத்தில் வெளியான படங்கள் என்ன,அதன் வசூல் என்பது குறித்த முழு விவரம் இதோ.

1.ராஜா ராணி

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநராக அறிமுகமானார்.இப்படத்தில் ஆர்யா,ஜெய்,நயன்தாரா,நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம்,சத்யன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 84 கோடி வசூல் செய்தது.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் 68 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டது.மௌனராகம் படத்தின் காப்பிதான் ராஜாராணி என்று சொல்லப்பட்டாலும் இப்படம் கதை மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது தான் நிதர்சனம்.

2.தெறி

ராஜா ராணி வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் அவர்களை வைத்து தெறி என்ற படத்தை உருவாக்கினார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா,ஏமி ஜேக்சன் நடித்திருந்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்தது.சத்ரியன் படத்தின் காப்பி தெறி என்று சொல்லப்பட்டாலும் இப்படம் கதை மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது தான் நிதர்சனம்.

3.மெர்சல்

தெறி பட வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைத்து மெர்சல் என்ற படத்தை உருவாக்கினார்.விஜய் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா,சத்யராஜ் , வடிவேலு,நித்யாமேனன்,காஜல் அகர்வால்,சமந்தா,ஹரீஷ் பெராடி ,கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 260 கோடி வசூல் செய்தது.அந்த நேரத்தில் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாகவும்,அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது.அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பிதான் மெர்சல் என்று சொல்லப்பட்டாலும் இப்படம் கதை மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது தான் நிதர்சனம்.

4.பிகில்

விஜய்,நயன்தாரா,ஜாக்கி ஷெராஃப்,விவேக் மற்றும் கதிர்  உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை கொண்டு அட்லீ இயக்கிய படம் பிகில்.இப்படம் 25 அக்டோபர் 2019 அன்று தீபாவளியை ஒட்டி வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உலகளவில் 300 கோடி வரை வசூல் செய்தது.அந்த நேரத்தில் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாகவும்,அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது.

5.ஜவான்

இயக்குநர் அட்லீ அவர்களின் முதல் பாலிவுட் படம் ஜவான்.இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்,நயன்தாரா,யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.கடந்த 7 அன்று ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 125 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கின்றது.

இப்படம் 1000 கோடி வரை வசூல் செய்யும் என்று ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் ஜவான் இதற்கு முன் வந்த படங்களின் ஒட்டு மொத்த காப்பி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.