கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம் ஆகிறது. இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்றையதினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நாளை முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றார்.

இதன் காரணமாக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயமுத்தூர் போகும் அவர், அங்கிருந்து கார் மூலமாக வாழப்பாடி போகின்றார். அதன்பிறகு முதல்கட்ட பிரச்சாரத்தை ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி அளவில் சட்டசபை உறுப்பினர் சித்ரா அவர்களுக்கு ஆதரவாக தொடங்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தம்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் மாலை ஆறு முப்பது மணி அளவில் கெங்கவல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்க இருக்கிறார். அதன் பிறகு ஆத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டையில் இரவு 8 மணி அளவில் அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கரை ஆதரித்து வாக்கு கேட்க இருக்கிறார்.

அதன் பிறகு கார் மூலமாக சேலம் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கே தன்னுடைய வீட்டில் தங்க இருக்கின்றார். அதற்கு மறுநாள் முதல் தமிழகம் முழுவதிலும் தொடர்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயணம் செய்யும் வழியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுக சார்பாக இதுவரையில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிவுறாத சமயத்தில், அதிமுக சார்பாக அனைத்து வேலைகளையும் முடித்து முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறங்கியிருப்பது திமுகவினர் அதிர்ச்சி அடைய செய்து இருப்பதாக சொல்கிறார்கள்.