டிடிவி பக்கம் சென்ற அதிமுக எம்எல்ஏ!

0
94

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் இதனால் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகிறது.

இதுபோன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 6 பேர் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டது. அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் சிவி சண்முகம், ஆகியோரின் பெயர் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி போன்றவை இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், நேற்றைய தினம் அதிமுக சார்பாக அந்த கட்சியின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தற்போது சட்டசபை உறுப்பினராக இருந்து வரும் 45 அவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் 18 பேருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் அமைச்சர்கள் 28 நபர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சாத்தூர் சட்டசபை உறுப்பினராக இருந்து வரும் ராஜவர்மனுக்கு இதில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அவருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத சூழ்நிலையில், சாத்தூர் சட்டசபை உறுப்பினராக இருந்து வரும் ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

அதோடு சாத்தூர் சட்டசபை உறுப்பினர் ராஜவர்மன் டிடிவி தினகரனின் ஆதரவாளர் என்பதால் தான் அவருக்கு அதிமுகவில் தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுகவில் இருந்து வரும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி களையெடுத்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.அதனால்தான் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்து வரும் சாத்தூர் சட்டசபை உறுப்பினருக்கு வாய்ப்பளிக்க படாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ராஜவர்மன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு நெருக்கமானவர் என்றும் அதன் காரணமாக தான் சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், அதில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆன பின்பு அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட உரசல் காரணமாக, எதிரெதிர் துருவங்களாக மாறி விட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.