எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

0
106
#image_title

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.முதல்வர் ஸ்டலினை விட எடப்பாடி பழனிசாமி அவர்களின் செய்தி தான் ஊடங்களில் அதிகம் வெளியாகி வருகிறது.அவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று எதிர்பார்க்கும் அளவிற்கு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி மற்ற காட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வந்த அதிமுக சில கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகி விட்டது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதால் சர்ச்சை வெடித்தது.
அதுமட்டும் இல்லாமல் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அதிமுக – பாஜகவிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாகவும்,இனி எப்பவும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுக – பாஜக கூட்டணி முறிவு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை பெரிதளவில் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள சில காட்சிகள் அதிமுக பக்கம் போக வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக சற்று ஆட்டம் கண்டது.இனி அதிமுக என்ற ஒரு கட்சி இருக்காது.எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நடத்த தெரியாது.ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என்று பேசிய வாய்கள் தான் இன்று அரசியல் செய்ய சரியானவர் எடப்பாடி பழனிசாமி.தனது அரசியல் காய்களை சரியாக நகர்த்தி வருகிறார் என்று சொல்லி வருகிறது.

புதிய தமிழகம்,புரட்சி பாரதம்,தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை பலப்படுத்த பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் தீட்டி வருகிறாராம்.

இந்த இரு கட்சிகளும் ஏற்கனவே அதிமுகவுடன் இணைந்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.இந்நிலையில் மீண்டும் இந்த இரு கட்சிகள் அதிமுகவுடன் இணைந்தால் கூட்டணி மேலும் பலத்துடன் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Previous articleஎவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!
Next article2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!