கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போலீஸ் கான்ஸ்டபிள்வேலை!! டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!
மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் காலியாக உள்ள 26,146 கான்ஸ்டபிள்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 31 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி: கான்ஸ்டபிள் (Constable and Sepoy)
காலியிடங்கள்: 26,146
BSF – 6174 (ஆண்கள் – 5211, பெண்கள் – 963)
CISF – 11025 (ஆண்கள் – 9913, பெண்கள் – 1112)
CRPF – 3337 (ஆண்கள் – 3266, பெண்கள் – 71)
SSB – 635 (ஆண்கள் – 593, பெண்கள் – 42)
ITBP – 3189 (ஆண்கள் – 2694, பெண்கள் – 495)
AR – 1,490 (ஆண்கள் – 1448, பெண்கள் – 42)
SSF – 296 (ஆண்கள் – 222, பெண்கள் – 74)
கல்வித் தகுதி : கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
*கணினி வழி தேர்வு (Computer Based Examination)
*உடற்தகுதி தேர்வு மூலம்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழி
கான்ஸ்டபிள் (Constable and Sepoy) பதவிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_24112023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது பிரிவினருக்கு – ரூ. 100/-
SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31-12-2023