ED- க்கு ரிவெஞ் கொடுக்கும் ஸ்டாலின்!! இப்படி செய்வதெல்லாம் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி – மறைமுகமாக சாடும் அண்ணாமலை!!

0
45
Stalin to take revenge for ED!! All this is done by an immature politician - Satum Annamalai indirectly!!
Stalin to take revenge for ED!! All this is done by an immature politician - Satum Annamalai indirectly!!

ED- க்கு ரிவெஞ் கொடுக்கும் ஸ்டாலின்!! இப்படி செய்வதெல்லாம் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி – மறைமுகமாக சாடும் அண்ணாமலை!!

கடந்த இரண்டு நாட்களாக  தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை குறித்து தான் பேச்சு இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றுக் கொண்டதால் ஒட்டுமொத்தமாக அத்துறையையே தமிழக அரசானது குற்றம் சாட்டி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக்கூடாது என்று பழிவாங்கும் நோக்கில் ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அலுவலகம் முழுவதிலும் லஞ்ச ஒழிப்பு துறை வைத்து சோதனையும்  நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு சோதனை நடத்தியது குறித்து பல தரப்புகளில் இருந்தும் கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் , அவர் சம்பந்தப்பட்ட வீடு, உறவினர்கள், நண்பர்கள் என சோதனை செய்யப்பட்டதே தவிர அவரின் தலைமையிடம் துளி கூட நெருங்கவில்லை. இங்கு மட்டும் ஏன் இவ்வாறு சோதனை நடக்கிறது? இது முற்றிலும் பழிவாங்கும் செயல்தான் என பலரும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஒருவர் ஊழல் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட பிறகும் அமைச்சர் என்ற பதவியில் தொடர்ந்து நீடிப்பது சரிதானா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.தமிழக அரசானது அவர்களுக்கென உரித்தான விதிவிலக்கை வடிவமைத்துக் கொண்டு அதிகாரம் என்ற பெயரில் செயல்படுத்தி வருவது நியாயமற்றது என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், ஒருவர் லஞ்சம் வாங்கி இருந்தால் அவரை குற்றம் சாட்ட வேண்டும் அதனை தவிர்த்து ஒட்டுமொத்தமாக அந்த துறையை குறை கூற தேவையில்லை. இதனை முற்றிலும் ப்ரொபஷனல் ஆகவே பார்க்க வேண்டும். அவரவர் செய்யும் தனிப்பட்ட தவறுக்கு ஒட்டுமொத்தமாக அந்தத் துறையை குறை கூற முடியாது.

அதுமட்டுமின்றி யார் லஞ்சம் பெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கைது செய்யவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரம் உள்ளது. அந்தவகையில் இதனை அரசியலாக பார்க்காமல் தனிநபர் செய்த குற்றமாக பார்க்க வேண்டும்.அப்படி பார்த்தால் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள் தான் தற்பொழுது உள்ளனர்.ஏனென்றால் இந்த விவகாரத்தை தற்பொழுது அரசியலாக்கி வருகின்றனர். அவ்வாறு மெச்சூரிட்டி இல்லாதவர்களை வைத்து தான் தமிழகமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, இது ஒரு சாபக்கேடு என்ற வகையில் கூறியுள்ளார்.