கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

Photo of author

By Divya

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோயம்பத்தூர்,மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “ஜீப் ஓட்டுநா்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.காலியாக உள்ள இந்த “ஜீப் ஓட்டுநா்” வேலைக்கு மாதம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.இதற்கு 9.10.2023 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

பணி: ஜீப் ஓட்டுநா்

காலியிடம்: ஓமொத்தம் 01

கல்வி தகுதி: ஜீப் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42

மாத ஊதியம்: ஜீப் ஓட்டுநா் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை Level-8 படி ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: நேரடி அல்லது தபால் முறை

ஜீப் ஓட்டுநா் பணிக்கு பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://coimbatore.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 9.10.2023 மாலை 5.45 மணி