வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!

0
33
#image_title

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக உலகக் கோப்பை தொடருக்குள் நுழையவுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்27) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்து 96 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்து 74 ரன்களும், லபுச்சாக்னே அரைசதம் அடித்து 72 ரன்களும் டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 56 ரன்களும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் பிரசாத் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

353 ரன்கள் என்ற இமாலய இலக்கை நீக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மென்களாக கேப்டன் ரோஹித் சர்மா அவர்களும் வாஷிங்டன் சுந்தர் அவர்களும் களமிறங்கினர். தொடக்க வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடத் தொடங்கினார்.

தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 81 ரன்களிலும் விராட் கோஹ்லி அரைசதம் அடித்து 56 ரன்களிலும் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பிறகு களமிறங்கிய ஸ்ரேய்ஸ் ஐயர் 48 ரன்களுக்கும் ஜடேஜா 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் மிகச் சிறப்பாக பந்துவீசி ரோஹித், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். ஜோஸ் ஹேசல்வுட் இரண்டு விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், டன்வீர் சங்கா, கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

66 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய அணியின் சுப்மான் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்குள் வெற்றியுடன் நுழைந்துள்ளது.