கல்வி தகுதி: டிப்ளமோ.. தேசிய வெப்ப ஆற்றல் கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.24,000/- ஊதியம்!!

0
35
#image_title

கல்வி தகுதி: டிப்ளமோ.. தேசிய வெப்ப ஆற்றல் கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.24,000/- ஊதியம்!!

மத்திய அரசின் தேசிய வெப்ப ஆற்றல் கழகம் (NTPC Limited) ஆனது காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி Diploma Trainee,Artisan Trainee பணிகளுக்கு மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 15 இறுதி நாள் ஆகும்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தேசிய வெப்ப ஆற்றல் கழகம் (NTPC Limited)

பதவி:

1.Diploma Trainee – 18

2.Artisan Trainee – 32

காலியிடங்கள்: இப்பதவிகளுக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு,Diploma படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: Diploma Trainee, Artisan Trainee பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: 21,500/- முதல் 24,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*ஆன்லைன் தேர்வு

*தொழில்நுட்ப தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Diploma Trainee,Artisan Trainee பதவிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ntpc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 15-09-2023