சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்! எச்சரிக்கை உடனே தீர்வு காண வேண்டும்!
ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால் என்னவாகும்.ஒருவருக்கு சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால் அது அவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கிறது.
சர்க்கரை நோயை கொண்டவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு, மாரடைப்பு ,பக்கவாதம், கால்களை இழத்தல் ,கோமா, இறப்பு என பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நீண்ட நாளாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது கவனிக்காமல் விட்டால் ரத்தக் குழாய்கள் கண்கள் நரம்புகளில் சிதைவு மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் என பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கிறது.ஆகையால் உடலில் உள்ள நரம்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தி உணர்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.
மேலும் சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலை உண்டாகிறது. அதனால் சிறுநீரக சம்பந்தமான நோய்கள் உண்டாகின்றன.ஹைபர் டென்ஷன் என்ற உயர் ரத்த அழுத்தம் உண்டாகி இதயம் சரியான ரத்தத்தை செலுத்த முடியாத நிலை உண்டாகும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தாவிட்டால் சத்துக்கள் குறைவு ஏற்பட்டு பிறகு அது சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். மேலும் கொழுப்புகள் அதிகரித்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.