முட்டை சேர்க்காத வெனிலா கேக் – சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Gayathri

முட்டை சேர்க்காத வெனிலா கேக் – சுவையாக செய்வது எப்படி?

கேக் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், சிலருக்கு கேக்கில் முட்டை சேர்ப்பதால் அதை தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கேக்கில் முட்டை இல்லாமல் எப்படி சுவையாக வெனிலா கேக் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

மைதா – அரை கப்

சர்க்கரை – அரை கப்

தயிர் – அரை கப்

வெனிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – கால் கப்

பேக்கிங் பவுடர் – அரை ஸ்பூன்

பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்

செய்முறை

முதலில் தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு சர்க்கரை நன்றாக கரைந்ததும், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனையடுத்து, கலவை நன்கு நுரைத்து வரும்போது எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்க வேண்டும்.

பிறகு, அதனுடன் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக கொட்டி கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் இந்த மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.

குக்கரில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இந்த மாவு கலவை ஊற்ற வேண்டும். பின்னர், மூடி சிறு தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். (குக்கரில் தண்ணீர் ஊற்றக்கூடாது. விசிலும் வைக்கக்கூடாது. குக்கருக்குள் மணல் பரப்பி வைக்கலாம்.

15 நிமிடங்கள் கழித்து ஒருமுறை திறந்து பார்த்து எடுத்தால், சுவையான முட்டை இல்லாத சாஃப்ட்டான வெனிலா கேக் ரெடி.