மோசமான வானிலை காரணமாக 8 விமானங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிப்பு
45 நிமிட மோசமான வானிலை காரணமாக எட்டு விமானங்கள் பெங்களூரு சர்வ தேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
பெங்களூரில் நகரில் நேற்று இரவு முதல் வானிலை மேகமூட்டத்துடன் வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த சூழலில் இன்று மாலை சுமார் 4 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கும்.
தேவனஹல்லி பகுதியில் மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய சூறைக்காற்று வீசியதன் காரணமாக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் சென்னைக்கு திருப்பிடப்பட்டது. விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஆறு விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகம் மாலை 4.05 முதல் 4.51 வரை விமான நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதால் பாதுகாப்பு கருதி தரையிறங்க வேண்டிய எட்டு விமானங்கள் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டும்.
புறப்பட வேண்டிய ஆறு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் அங்கு எரிபொருள் நிரப்பிய பின்னர் மீண்டும் பெங்களூருக்கு வரும் என தெரிவித்துள்ளதுடன் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.