கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!!

0
203

கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!!

சந்திரபாபு நாயுடு நடத்திய கூட்டத்தில் சிக்கி பலியான எட்டு பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். ஆந்திர மாநிலத்தில் கந்த குருவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின் கல்விச் செலவை என்டிஆர் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வரும் அறக்கட்டளை ஏற்றுக் கொள்வோம்.என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள twitter பதிவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடும் காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள twitter பதிவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடும் காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

அந்த பதிவில் பிரதமர் ஆந்திராவின் நெல்லூரில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கப்படும். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு 50000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

Previous articleபாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!
Next articleரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்!