ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்!

0
268
Is it worth paying Rs 94? Coconut tree climbers hit the jackpot!

ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழக வேளாண் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ 94 மட்டும் செலுத்தினால் போதும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீடு திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம் என தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து துறை செயலர் சி.சமயமூர்த்தி கூறுகையில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீடு திட்டம் வழங்கப்படுகின்றது.

தென்னை மரம் ஏறும்பொழுது விபத்து ஏற்பட்டு,24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால் அவர்களின் வாரிசுக்கு இழப்பீடாக ரூ ஐந்து லட்சம் வழங்கப்படும்.அதனையடுத்து நிரந்தர பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ2.50 லட்சம், அவர்களின் மருத்துவ செலவிற்கு அதிகபட்சம் ரூ 1 லட்சம்,தற்காலிக முழு ஊனத்திற்கு ரூ 18 ஆயிரம். உதவியாளர் செலவுக்கு ரூ 3 ஆயிரம் ஆம்புலன்ஸ் செலவிற்கு ரூ 3 ஆயிரம் இறுதிச் சடங்கு செலவிற்கு ரூ 5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காப்பீடு செய்ய ஆண்டு காப்பீடு தொகையாக ரூ375 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் தங்களது பங்குத்தொகையாக ரூ 94 மட்டும் செலுத்தினால் போதுமானது.மீதமுள்ள 75 சதவீதம் அதாவது ரூ 281 ஐ தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்தும்.

இதன் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் தன்னை வளர்ச்சி வாரிய http://www.coconutboard.gov.in என்ற  இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் பெயர்,ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன்,பகுதி வட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், புதிய பகுதியில் தென்னங்கன்றுகள் நடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

author avatar
Parthipan K