பொங்கல் முதல் இந்த புதிய வழித்தடத்திலும் மின்சார ரயில்கள்! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் பயணிகள்!

Photo of author

By Hasini

பொங்கல் முதல் இந்த புதிய வழித்தடத்திலும் மின்சார ரயில்கள்! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் பயணிகள்!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரம் வரை மின்சார ரயில் பாதை வசதியும் உள்ளது. ஆனால் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் சில இடங்களில் விரைவு ரயில் பாதை வழியாக இயக்கப்படும். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்குவது மிக அதிக நேர இடைவெளி இருக்கும்.

அதன் காரணமாக செங்கல்பட்டு வரை பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகள் அதிக நேரம் ரயில் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த கால நேரத்தை குறைப்பதற்காகவும், பொது மக்களுக்காகவும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 268 கோடி மதிப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாம்பரம் – கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி –  சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு என மூன்று பிரிவுகளாக இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்த வழித்தடங்களில் சிக்னல்கள் அமைப்பது, மின் இணைப்பு வழங்குதல், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் விரிவாக்க பணிகளும் நடந்து முடிந்துள்ளன. தற்போது இந்த பணிகள் அனைத்துமே முடிவடைந்துவிட்டன.

எனவே இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்களை இயக்கி சமீபத்தில் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. தற்போது மூன்றாவது வழித்தடத்தில் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. எனவே தை பொங்கல் முதல் இந்த மூன்றாவது வழித்தடத்திலும் மின்சார ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் காத்திருப்பு நேரம் குறைந்து செங்கல்பட்டு வரை மின்சார ரயில் சேவையும் அடிக்கடி கிடைக்கும் என்று பயணிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.