குப்பை கிடங்காக இருந்த சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பூங்கா!

0
80
New park worth Rs 20 crore opened by Chief Minister in a swampy landfill!
New park worth Rs 20 crore opened by Chief Minister in a swampy landfill!

குப்பை கிடங்காக இருந்த சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பூங்கா!

சென்னை மாநகரத்தில் உள்ள தற்போது உள்ள ஒரே சதுப்பு நிலம் என்றால் அது பள்ளிக்கரணையில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில் அதாவது 1960-ஆம் ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது, தற்போது நகரமயமாதல் ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்கள், காரணமாக அது 700 ஹெக்டர் பரப்பளவிற்கு சுருங்கிவிட்டது.

தற்போது இந்த சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி முழுவதும் நன்றாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. அதுவும் ரூபாய் 20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள நடைபாதையில் பொதுமக்கள் நடைப் பயிற்சி செய்யவும், ஓய்வு எடுக்கவும், தேவையான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே சதுப்பு நிலத்தில் பறவைகளை பாதுகாக்கும் வகையில், 42 வகையான தாவர வகைகள் மற்றும் புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர பறவைகள் வந்து அமர்ந்துவிட்டு செல்லக் கூடிய வகையில் நீர்நிலைகளும், அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் இந்த சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சியின் குப்பை மேடாக இருந்த இந்தப் பகுதி தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.