மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!
தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நெடுங்காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை ஊழியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான அதிருப்தயில் இருந்து வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் திட்டமிட்டனர். இதன்படி நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை நடைபெறும் போராட்டத்தில் பங்கு பெறும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. அடுத்து நாளை போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் விவரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்ப ஒவ்வொரு மண்டல பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்ததாக நாளை நடைபெறும் ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் போராட்டத்தினால் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.