தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த மின் துறை அமைச்சர்!

0
156

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை கருத்தில் வைத்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே மாதம் பத்தாம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில், நேற்று ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் இதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே அதேபோல ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அதோடு தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான கூடுதல் வைப்பு தொகையை செலுத்துவதற்கு ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் காலநீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்கு இதற்கு முன்னரே போதுமான அளவு கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும், இனிமேல் இதற்கான கால நீட்டிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், மின்கட்டணம் செலுத்தாதவர்கள் மீது மின்வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இருந்தாலும் அதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleவிஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!
Next articleதமிழ்நாட்டின் இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?