விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

0
70

முன்னாள் அமைச்சரும் ஊராளி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்ட சபை உறுப்பினருமான விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக விஜயபாஸ்கர் அவர்களும் திமுக சார்பாக பழனியப்பன் அவர்களும் போட்டியிட்டார்கள். இதில் விஜயபாஸ்கர் 23 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

இந்த சூழலில் அவருடைய வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

அவருடைய சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனுவில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம், போன்றவற்றை விநியோகம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி அடைந்திருக்கிறார். அதோடு வாக்காளர்களை கவருவதற்கு விஜயபாஸ்கர் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றியடைந்து இருக்கின்றார் விஜயபாஸ்கர். ஆகவே அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் பழனியப்பன் அந்த மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.