எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு! ப்ளூ டிக் இனி கிடையாது?
உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.இவர் அண்மையில் தான் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அவர் அதனை கைப்பற்றிய உடனே பல முக்கிய முடிவுகளை எடுத்தார்.ட்விட்டரின் தலைமை நிர்வாகிகளை அதிரடியாக நீக்கினார்.
அதனை தொடர்ந்து ஆள் குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கினார்.மேலும் பிரபலங்கள் ,புகழ்பெற்றவர்கள் என ட்விட்டர் கணக்கை அதிகாரபூர்வ கணக்குகளாக அறிவிக்க ப்ளூ டிக் முறை பின்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் எலான் மஸ்க் ப்ளூ டிக் கணக்குகளை பெற கட்டணமும் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.அந்த கட்டணத்தையும் உயர்தினார்.
முன்னதாக ப்ளூ டிக் சேவை பெறுவது என்பது சற்று கடினமாக இருந்தது.ஆனால் சற்று சுலபமானதால் யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் வசதி பெறலாம் என்ற நிலையில் இதனை தவறாக பயன்படுத்தி சிலர் போலி தகவல்களை பரப்பி வருகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
அதனால் புதிய வழிமுறையாக பொய்யான கணக்குகளை வைத்து போலி செய்திகளை பரப்பினால் கட்டண தொகையும் திருப்பி தரப்பட்ட மாட்டாது.அவர்களின் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிறுவனங்கள் ,தனிநபர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் போலி கணக்குகளை அடையாளம் காணும் வரையிலும் இந்த ப்ளூ டிக் குறியீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.