அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை!! டெல்லி வரை திரண்ட ஆதரவு!! 

Photo of author

By Amutha

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை!! டெல்லி வரை திரண்ட ஆதரவு!! 

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது விழுப்புரத்தில் பூத்துறையில் செம்மண் வழக்கில் 28 கோடி அரசுக்கு இழப்பீடு செய்ததாக வழக்கு பதியபட்டது. இந்த சூழ்நிலையில் இன்று காலை 7 மணி முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை ஸ்ரீதர் நகரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது  மத்திய பாதுகாப்பு படையினர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பொன்மொழியின் வீட்டில் நடைபெறும் இந்த சோதனையை குறித்து ஆளும் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெரிகிறது என ஆலயம் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும்  சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் “அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.