கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

Photo of author

By Divya

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

இன்றைய உலகில் பணத்தை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு மரியாதை மற்றும் அதிகாரத்தை கொடுக்கிறது. பிறப்பு இறப்பு என்று அனைத்திற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.

இந்த பணத்தை சம்பாதிக்க அள்ளும் பகலும் அயராமல் உழைத்தும் விலைவாசி உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றின் தேவை இன்னும் கூடத் தான் செய்கிறது.

இதனால் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. ஒருமுறை கடன் வாங்கி விட்டால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

இந்த கடனில் இருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் கோதுமை மாவு. இந்த மாவில் வெல்லம் சேர்த்து இனிப்பு பூரி செய்து கொள்ளவும்.

இந்த நெய்வேத்தியத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள ஆஞ்சிநேயர் படத்திற்கு முன் நெய்வேத்தியமாக படைத்து கடன் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

பிறகு கற்பூர தீபம் காட்டிய பிறகு ஆஞ்சிநேயருக்கு படைத்த நெய்வேத்தியத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு சாப்பிட கொடுங்கள்.

இவ்வாறு ஆஞ்சிநேயரை வழிபட்டால் உங்களுக்கு இருக்கும் கடன் அனைத்தும் அடைந்து போக வழி பிறக்கும்.