இங்கிலாந்து – ஆஸ்திரேலியா போட்டி உறுதியானது

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் தொடர் முடிந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து விளையாடுகிறது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணி இந்த மாதம் 24 ந் தேதி இங்கிலாந்து செல்கிறது.