இங்கிலாந்து – பாகிஸ்தான்: மோர்கனின் அதிரடியால் வெற்றி பெற்ற இங்கிலாந்து

0
137

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 1 – 0 என தொடரை கைப்பற்றியது.

இதனை அடுத்து முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹபிஸ் 69 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டனான மோர்கன் அதிரடியாக விளையாடி 33 பந்துகளுக்கு 66 ரன்கள் குவித்தார்.

Previous articleதமிழகத்தில் மேலும் 6495 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!
Next articleஇன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020