மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டி

0
115

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது ஆட்டத்தில் மூன்று நாட்கள் முடிந்த நிலையில் 86 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது பெரும்பாலான நேரங்களில் மழையே வந்ததால் ஆட்டம் சரியாக நடக்கவில்லை அதிலும் குறிப்பாக 3வது நாளான நேற்று மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை பாகிஸ்தான் அணி  223 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்துள்ளது அபாரமாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அரைசதம் அடித்து 61 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Previous articleதொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?
Next articleஇந்தியாவிற்கு இது சுதந்திர தினம் அல்ல கருப்பு தினம்! ட்ராபிக் ராமசாமி ஆவேச பேச்சு!