குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

Photo of author

By Parthipan K

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் முதல் மீண்டும் விளையாட தொடங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணியுன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதன் தினம் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் வருகிற 13 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். மேலும் தற்போது வரை அவரின் பெற்றோர் நியூசிலாந்தில் தான் வசிக்கிறார்கள். இந்நிலையில் இவர் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த வார இறுதியில் நியூசிலாந்துக்கு செல்ல இருக்கிறார். இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.