இங்கிலாந்து அணி அறிவிப்பு

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சவுதம்டனில் முறையே வருகிற 30-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட ஜோ டென்லி அணியில் இடம் பிடித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன், லியாம் டாவ்சன், ஜோ டென்லி, சாகிப் மக்மூத், அடில் ரஷித், ஜாசன் ராய், ரீசி டாப்லி, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.