அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

Photo of author

By Parthipan K

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

Parthipan K

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.