அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

Sakthi

அதிமுகவில் சமீபகாலமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தான் முன்னாள் அமைச்சர்கள் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அணுகுமுறை மற்றும் வியூகங்கள் காரணமாக தங்களுக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று நினைக்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ஓ பன்னீர்செல்வம் வழியாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி கொடுத்து பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த முயற்சித்து இருக்கிறதுஆனால் பன்னீர்செல்வம் நானே அதிமுகவின் கட்சி தலைவர் என்ற ரீதியில் ஒரு முடிவில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் இதுவரையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசாத நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் தற்சமயம் தேனி நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னீர் செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என்ற பெயரில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவில் பன்னீர்செல்வம் அதிகார மையமாக திகழ தொடங்கி இருக்கிறார்.