திமுகவின் முக்கிய எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

0
72

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்கள் இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது.

இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்ட சட்ட சபை உறுப்பினர் ஐயப்பன் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கட்சிக்காரர்களுடன் ஒன்றிணைந்து ஒரு சில தினங்களாக நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த வாரம் ஐயப்பனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.அதில் நோய்த் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற ஒரு பதிவில் தன்னுடைய உடல் நிலை சீராக இருப்பதாகவும், அதோடு தமிழக மக்கள் எல்லோரும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.