ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

0
590
#image_title

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 70க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அதிமுக சார்பில் தென்னரசு, அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். 

இதனையடுத்து அனைத்து கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மிக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இடைத்தேர்தலுக்காக மத்திய பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Previous articleதமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!
Next articleஅதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here