ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் கே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த  குடும்ப தகராறு காரணமாக ஜோதிமணிசெலம்பரகவுண்டன் புதூரில்  உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தா. மேலும் அவர் அதிக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

மேலும் இந்நிலையில் வீட்டில் இருந்த ஜோதிமணி திடீரென மாயமாகிவிட்டார். மேலும் ஜோதிமணியை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.மேலும் ஜோதிமணி எங்கு சென்றார் என்று எந்த ஒரு தகவலும்  கிடைக்காத நிலையில் அவரது உறவினர்கள் புளியம்பட்டி போலீசாரிடம்  புகார் அளித்தனர். அந்த புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதிமணியை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் திடீரென இளம்  பெண் மாயமான சம்பவம் பகுதி முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.