இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…!

0
77

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…!

நம் வாழ்நாளில் பறவைகள், யானை, குரங்கு போன்ற எத்தனையோ உயிரிணங்களை பாதுகாக்க உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கொடுத்து உதவி வருகிறோம். ஆனால், என்றாவது தவளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தோன்றியது உண்டா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவில் தவளை மற்றும் தேரைகளுக்காக சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார்கள். அதோடு இல்லாமல், தன்னார்வலர்கள் மூலம் அதனை கண்காணித்து, தவளைகளுக்கு உதவியும் செய்து வருகிறார்கள்.

எஸ்தோனியாவின் தலைநகர் தாலினில் உள்ள வனப்பகுதியில் உள்ள சாலைகளின் இரு புறங்களிலும் உள்ள குட்டைகளில் ஏராளமான தவளைகள் மற்றும் தேரைகள் உள்ளன. இவை இனப்பெருக்கம் செய்ய ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு நகர்ந்து செல்கின்றன.

அதில் சில தவளைகள் சாலையை கடக்கும் போது, ஊர்திகளில் அடிப்பட்டு இறக்கின்றன. இதனால், இரண்டு வாரங்களுக்கு இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தாலின் நகரம் தடை விதித்துள்ளது. இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை அந்த சாலைகளில் எந்த ஊர்திகளும் செல்லக்கூடாது.

இதனை கண்காணிக்க, தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த வழியாக செல்லும் ஊர்தி ஓட்டிகளுக்கும், தவளைகள் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் 97,000 தவளைகள் சாலையை கடக்க அவர்கள் உதவி செய்துள்ளனர். இதில், போன ஆண்டு மட்டும் 2,000 தவளைகள் இருக்கும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற பிரச்சனை எதிர்காலத்தில் வராமல் தடுக்க, சாலைகளின் குறுக்கே குழாய்களை பதிக்க திட்டமிட்டுள்ளனர். இது தவளை போன்ற ஊர்வன உயிரினங்கள் ஊர்திகளில் அடிபட்டு இறக்காமல் இருக்க உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.