100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!

0
389

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!

மக்களின் பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதுண்டு. கண் எரிச்சல் கிட்ட பார்வை தூரப்பார்வை என ஆரம்பித்து மக்கள் பலவற்றை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் அலர்ஜியாகவும் ஒரு சிலருக்கு மாறு விடுகிறது.

அவ்வாறு இருப்பவர்கள் தங்களது வீட்டின் அருகில் இருக்கும் இந்த பதிவில் வரும் செடியினை பயன்படுத்தினால் போதும் உடனே குணமாகும். நமது வீடுகளில் அருகில் அதிகளவு துத்தி செடி காணப்படும் இதில் மகிமை பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

இந்த துத்தி செடியை நாம் உபயோகித்து கண்ணில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம். இது கண் பார்வைக்கு மட்டுமின்றி மூட்டு கை கால் வலி கட்டி போன்றவைகளுக்கும் நல்ல மருந்தாக பயன்படும்.
மூட்டு வலி குணமாக:
கை கால் மூட்டு வலி உள்ளவர்கள் சிறிதளவு கடுகு எண்ணெயை சூடு படுத்தி அதில் நான்கு ஐந்து துத்தி இலைகளை போட்டு நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த எண்ணையை கை கால்களில் வீக்கம் உள்ள  உள்ள இடத்தில் தடவி வர எளிதில் குணமாகும்.

கண் பிரச்சனை குணமாக:
கண் எரிச்சல் கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் நான்கு ஐந்து துத்தி இலைகளை எடுத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடு படுத்த வேண்டும்.

அவ்வாறு சூடாக உள்ள தண்ணீரில் எடுத்து வைத்துள்ள துத்தி இலைகளை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இலையின் சாரானது தண்ணீரில் இறங்கியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அந்த தண்ணீரை ஆற வைக்க வேண்டும்.

பின்பு சிறிய ஒரு காட்டன் எடுத்து ஆற வைத்துள்ள அந்த தண்ணீரைத் தொட்டு கண்ணின் மேல் ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வர கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு முறை இவ்வாறு செய்ய உடனடி தீர்வை பார்க்க முடியும். மேலும் இது கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த கூடியது.

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் மேம்படும் நாள்!!
Next articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here